3041. |
நற்றமிழ்
ஞானசம் பந்தன் நான்மறை |
|
கற்றவன்
காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே. 11
|
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன்,
நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய்
மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும்
திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப்
பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.
கு-ரை:
உன்னிய - நினைத்துப்பாடிய. அற்றம் இல் மாலை - கேடு
அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் (வாராமல் தடுக்கும்) மாலை.
ஐந்தெழுத்து உற்றன ஆகிய இம்மாலையிலுள்ள பத்துப் பாசுரங்களில்
வல்லவர் தேவர் ஆவர்.
திருஞானசம்பந்தர் புராணம்
மந்திரங்க ளானஎலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாம்
செழுமறையோர்க் கருளிஅவர் தெருளும் ஆற்றால்
மூந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ்(சு) என்பார்
அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மேஎன்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
- சேக்கிழார் |
|