| 
         
          | 3051. | கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய |   
          |  | சேடன 
            செழுமதில் திருவிற் கோலத்தை நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
 பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.       11
 |   
        திருச்சிற்றம்பலம்  
       
 
        மேன்மையுடைய பெருமான் 
        வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.       கு-ரை: 
        சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை. சீர்மை சிறப்பொடு நீங்கும் (குறள் - 195) என்பதிற்போல, சமணர் என்ற
 சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு அமைச்சு என்றாற்
 போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி ஆடை. கையர் வெறுக்கத்
 தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.
       11. 
        பொ-ரை: வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களையுடைய
 திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை
 நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப்
 பாவம் இல்லை.
       கு-ரை: 
        கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ பெருமானுடைய (திருவிற்கோலத்தை).
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்துபொருட்பதிகத் தொடைமாலை புரம்எரித்த படிபாடி
 அருட்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்தருளி
 விருப்பினொடுந் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.
 -சேக்கிழார்.
 |  |