பதிக வரலாறு:
திருஞானசம்பந்த
சுவாமிகள் திருமருதந்துறைத் திருவாலவாயை
வழிபட்டிருந்த காலத்தில், சிவபாதவிருதயர் அங்குச் சென்றார். அவரைக்
கண்டவர், பிள்ளையார் திருவடியை வணங்கி, அவர் எழுந்தருளினார் என்று
மகிழ்ச்சியோடு உரைத்தனர். எப்பொழுது வந்தருளிற்று என்று எதிரே
எழுந்தருளினார். வணங்கினார். அவர் சார்வுகண்டருளினார்.
திருத்தோணியமர்ந்தருளிப் பவபாசம் அறுத்தவர் பாதங்களை
நினைந்தருளினார். அம்மையப்பர் நினைவு ஒன்றுதானே பிள்ளையாருக்கு
உண்டு. திருக்கை குவித்தருளி, "அருந்தவத்தீர்! எனை அறியாப்பருவத்தே
எடுத்தாண்ட பெருந்தகை யெம் பெருமாட்டியுடன் இருந்ததே என்று
போற்றி இசைத்தது" இத் திருப்பதிகம்.
பண்: கொல்லி
ப.
தொ. எண்: 282 |
|
பதிக
எண்:24 |
திருச்சிற்றம்பலம்
3052. |
மண்ணின்நல்
லவண்ணம் வாழலாம் வைகலும் |
|
எண்ணின்நல்
லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 1 |
1.
பொ-ரை: உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு
வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு
குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும்
பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில்
பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
கதிக்கியாதும் - கதிக்கு+யாதும். ஓர் குறை இ(ல்)லை. கண்ணின்
நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய. கழுமலவளநகர்
கண்ணின் நல்லஃது.
|