3053. |
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் |
|
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடு்ம் பெருந்தகை யிருந்ததே. 2 |
3054. |
தொண்டனை செய்தொழில் துயரறுத் துய்யலாம் |
|
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. 3 |
2.
பொ-ரை: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை
இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு
ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த
அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம்
திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய
பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய
உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த;
பொற்கிண்ணம். அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார்
உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால்
அடிசில் எனப் பட்டது. "ஞானபோனகர்" என்று சேக்கிழார் சுவாமிகள்
வழங்குவதாலும் அறிக.
3.
பொ-ரை: தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற
வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு, வண்டுகள்
மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில்
அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வளநகரில்
உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
தொண்டு அணைசெய் தொழில் துயர் - தொன்று தொட்டே
ஆன்மாவைப்பற்றி வருத்தும் தொழிலையுடைய வினைகள். "தொல்லை
வல்வினை தொந்தம்" என்ற அப்பர் திருக்குறுந்தொகை காண்க.
பெண்துணையாக ஓர் பெருந்தகையிருந்தது என்றது - எவ்வுயிர்க்கும்"
அருந்துணையாயும், பெருந்துணையாயும் உற்றார்
|