பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)25. திருந்துதேவன்குடி575

சிவவேடம் எனப்படும். இவ்வேடம் புனைந்தாரைக் குணம் குற்றம் பாராது
வேடத்தையே கருதி வழிபடல்வேண்டும். இவர்கள் அஞ்சுவது
யாதொன்றுமில்லை. இவரைப் பூசிப்போருக்கு எய்தாதன இல்லை என்பன
இப்பதிகத்தால் தெளிவுறுத்தப்படும் பொருள். இவற்றில் திருநீறு ஒன்றையே
பொருளெனக்கொண்டு முத்தியடைந்தவர் ஏனாதிநாதநாயனார் 'கடையவன்றன்
நெற்றியின்மேல் வெண்ணீறு தாம் கண்டார்" "கண்ட பொழுதே கெட்டேன்.
முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு கண்டேன். வேறு
இனி என்? அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினார்" என்று மனம்கொண்டு
இவர்தம் கொள்கைக் குறிவழி நிற்பேனென்று "நேர் நின்றார்". மின் நின்ற
செஞ்சடையார் தாமே வெளி நின்றார்" (தி.12 ஏனாதி நாயனார் புராணம்.40)

     சடைமுடி யொன்றே காரணமாக, எரியிற்புகுந்து உயிர்நீத்து
முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு முதலிய அனைத்தும் கூடிய
வேடத்தைப் பொருளென்றுகொண்டு முத்தி பெற்றவர் மெய்ப்பொருள்
நாயனார்.

திருஞானசம்பந்தர் புராணம்

வெங்கண் விடைமேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்கண் அமர்வார்தம் முன்னே அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந் திருந்துதே வன்குடி சேர்ந்தார்.

 


திருந்துதே வன்குடி மன்னுஞ் சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்கு போற்றிவ ணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி மற்றும்இ வர்வேடமாம் என்(று)
அருந்தமிழ் மாலைபு னைந்தார் அளவில்ஞா னத்தமு துண்டார்.

                                 -சேக்கிழார்.