| 
       பதிக வரலாறு:      மதுரைத் 
        திருவாலவாயினை வழிபட்டு அரிதின் நீங்கி, தென்னவன் தேவியாரும், அமைச்சர் குலச் சிறையாரும், ஊன் நெகிழ, உள்ளம் அழியக்
 கண்ணீர் பாய்ந்து ஒழுக, உணர்வின்றி வீழ்ந்து வணங்கக்கண்டு,
 "உம்மையான் பிரியாதவண்ணம் இந்நாட்டு இறைவர் பதி எனைப் பலவும்
 பணிவீர்" என்று அருளி அவ்விருவரொடும், அடியரொடும் திருப்பரங்குன்றம்
 முதலியவற்றை வணங்கிய காலத்தில், கற்றார்கள் தொழுதேத்தும்
 கானப்பேரும் கைதொழுது பாடிய தமிழ் இத்திருப்பதிகம்.
 பண்: 
        கொல்லி  
         
          | ப.தொ.எண்: 284 |  | பதிக எண்: 26 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3074. | பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ |   
          |  | விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும் கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
 அடியலால் அடைசரண் உடையரோ வடியரே.      1
 |  
         
          | 3075. | நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப் |   
          |  | பெண்ணின்நல் 
            லாளையோர் பாகமாப் பேணினான் |  
       1. 
        பொ-ரை: பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கையுடைய ஆண்யானையானது, விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை
 ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய
 திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
 திருவடிகளை யன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?
      கு-ரை: 
        பெரும் கை(ம்)மா - தலைவனாகிய துதிக்கையையுடைய யானை. மலர்தழீஇ - மலர்களை ஏந்திக்கொண்டு. கடி - வாசனை, உலாம்
 - உலாவும்.
       2. 
        பொ-ரை: நுண்ணிய இடையையும், பெரிய அல்குலையும், சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின்
 |