பக்கம் எண் :

588திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3095. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
  கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.   11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய
திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின்
திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல
ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின்
பாவம் நீங்கும்.

     கு-ரை: மெய்ப்பாவமே-உடம்பினாற் செய்த பாவம் . எனவே
ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக.

திருஞானசம்பந்தர் புராணம்

சக்கரப் பள்ளியார் தந்திருக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொற் றமிழினால் வேதமும் பாடினார்.

                                 -சேக்கிழார்.