| 
       பதிக வரலாறு:      திருவையாற்றிலிருந்து 
        வழிபட்டுவந்த கவுணியர் கோமானார், குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டு, அருள் பெற்றுக் குறிப்பினோடும்
 படரும் நெறிமேல்அணைவாராய்ப் பரமரது திரு நெய்த்தானப் பதியினை
 நண்ணி வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடிச் சென்று, புடைவளர்
 மென் கரும்பினொடு பூகம் மிடை மழபாடி யை அடைந்து போற்றிப்
 பாடியது இத் திருப்பதிகம்.
 பண்: 
        கொல்லி  திருச்சிற்றம்பலம
         
         
          | 3096. | காலையார் வண்டினங் கிண்டிய காருறும் |   
          |  | சோலையார் 
            பைங்கிளி சொற்பொருள் பயிலவே வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்
 மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.           1
 |  
       
       1. 
        பொ-ரை: காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள் மேகத்தைத் தொடும்படி
 வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும்
 சைவநூல்களில், சொல்லையும், பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய
 விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய
 சிவபெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன்
 தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
       கு-ரை: 
        காலை - மருதப்பண்ணை. காலை - காலைப்பண்; ஆகுபெயர். ஆர் -பாடிய (ஆர்த்தல்-ஒலித்தல்) வண்டினம். கிண்டிய - தம்கால்களால்
 கிளர்ந்த, (மலர்களையுடையசோலை). கார் உறும் - மேகம்தங்கும். சோலை
 - சோலையிற் பொருந்திய, பசியகிளிகள் அத்தலத்தினர் பயிலும் சைவ
 நூல்களின் சொல்லையும் பொருளையும் பயில, வேதியன் விரும்பும் இடம்
 மழபாடியென்க. பயில - என்பது காரண காரியம் ஒன்றும் இன்றி வந்த
 வினையெச்சம். வாவி
 |