பக்கம் எண் :

590திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3097. கறையணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணிய
  பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.         2

3098. அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
  செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்


செங்கமலம் முகங்காட்ட.........குவளைக் கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே.”
என்பதில் காட்ட என்புழிப்போல. (தி.1 பதி.129)

     கார் - பண்பாகுபெயர். பைங்கிளி சொற்பொருள் பயில என்பதனை
“வேரிமலிபொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே”
என்பதனோடு ஒப்பிடுக. மாடங்களில் சந்திரன் தவழும் மழபாடி என்க.
விடம் அணி வேதியன் - விடக் கறையைக் கழுத்திலணிந்த வேதத்தின்
பொருளானவன். விடம் காரண ஆகுபெயர்.

     2. பொ-ரை: நீலகண்டராயும், நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை
அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய
பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும்
ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள
வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும்
திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கண்ணுதலும் பிஞ்ஞகனுமாகிய இறைவன்.
பேணும்-விரும்பும்.(ஊர்). நண்ணிய பிறை-தன்னைச் சரண் அடைந்தபிறை.
பிஞ்ஞகம்-மயில் தோகை; வேட உருத்தாங்கியபோது தரித்தலால் பிஞ்ஞகன்
என்று சிவபெருமானுக்குப் பெயர். நீர்த்துறைகளிலே வெள்ளிய பறவைகள்
அங்கு மலர்ந்த வெண்மலர்களுக்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி
நெருங்கியுள்ள வளம்பொருந்திய மழபாடி என்பது மூன்றாம் அடிக்குப்
பொருள். (துதைய-) பொருந்திய என ஒரு சொல் வருவிக்க.

     3. பொ-ரை: அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிறவேதங்கள்
ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன், இறைவன்,
பந்து வந்தடைகின்ற மென்மையான விரல்களையுடைய உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம், தென்றற்