3104. |
ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் |
|
நாடினார்க்
கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே. 9 |
3105. |
உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் |
|
நெறிபிடித்
தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே. 10 |
9.
பொ-ரை: இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் அடிமுடி தேட, காண்பதற்கு அரியவராய் விளங்கிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த
பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய
திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
எழில் - அழகையுடைய. மால், பன்றி உரு எடுத்தமையின்
இங்ஙனம் கூறப்பட்டது. இகழ்ச்சிக்குறிப்பு. எழில்செய் கூகை என்றார்
சிந்தாமணியில். இனி, எழில்-கோலம். அச்சொல் பன்றியைக் குறிக்கும்.
இலட்சிதலட்சணையால் எனக்கொண்டு அதற்கேற்ப அன்னமாகப்
பிரமனும் (பன்றியாகத் திருமாலும்) நாடினார்க்கு அறிதற்கரிதாயிருந்த
நாதனார் எனலும் ஆம். பக்கங்களிலெல்லாம் பனைமரங்கள் பழுத்துப்
பழம் உதிர்விக்கவும், மற்றப் பக்கங்களிலெல்லாம் பசிய சோலைகள் வளம்
மிகுவிக்கவும் பொருந்திய மழ பாடி, பழம் பழுத்தவுடனே உதிர்தல் பனை
மரத்துக் குண்மையால் காகதாலியம் என வடநூலார் கூறுவர்.
10.
பொ-ரை: நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில்
மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும்,
புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக்
கொள்ள வேண்டா. படமெடுத்தாடும், புள்ளிகளையுடைய பாம்பை
ஆபரணமாக அணிந்து, இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான்
விற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:உறி
பிடித்து:-நீர்க்கரத்தில் எறும்பு விழுந்து கொலைப்
|