|
காரினார்
கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே. 10 |
3117. |
பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன் |
|
அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
யானவை அல்ல, மேகம்
தவழும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த
திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை
நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும்.
கு-ரை:
போதி-அரசமரம். கௌதம புத்தர் அம்மரத்தினடியில் இருந்து
ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர். பிண்டி - அசோகு.
அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர் சமணர்.
வாதினால்
உரை அவை - வாதினால் உரைக்கும் அச்சொற்கள். ஏர்
- அழகு; சிவவேடம். இப்பாடல் குறிலெதுகை.
11.
பொ-ரை: நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட
சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல, சிவஞானத்தையே
ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி போன்ற கண்டத்தையுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை
வணங்கிப் போற்றிய இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.
கு-ரை:
புறவம் - சீகாழி. கருமணி - நீலமணி போன்ற. மிடற்றினன் -
கண்டத்தை யுடையவன். பரவிய - துதித்த. பறையும் - நீங்கும்.
|