| 
         
          | 30. 
              திருஅரதைப் பெரும்பாழி |  
       பதிக வரலாறு:      திருவிரும்பூளையை 
        எய்திய திருஞானசம்பந்தர், திருத்தொண்டர் எதிர்கொள்ள, மணிமுத்தின் சிவிகையினின்று இறங்கினார். கோயிலை
 அணைந்து இறைஞ்சினார். பண் தரும் இன்னிசைப் பதிகம் மறைப்பொருள்
 விரியப் பரம்பொருளைப் பாடினார். பின்னர் வழிபட்ட தலங்கள் பல.
 அவற்றுள் ஒன்று திருஅரதைப் பெரும்பாழி. அங்குப் புனைந்த நீடு தமிழ்த்
 தொடை இத்திருப்பதிகம்.
 பண்: கொல்லி 
         
          | ப.தொ.எண். 288 |  | பதிக எண்:30 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3118. | பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி |   
          |  | மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
 பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     1
 |  
         
          | 3119. | கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும் |   
          |  | பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார் |  
       1. 
        பொ-ரை: இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச்
 சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு அணிந்த பித்தரான
 சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே
 ஆகும்.
      கு-ரை: 
        பைத்த - படத்தையுடைய, பாம்பு. பைத்த குறிப்புப் பெயரெச்சம். பாம்பு கோவணத்தோடு - என உருபு பிரித்துக் கூட்டுக.
 முழக்கம் முதுகாடு-முழக்கத்தையுடைய முதுகாடு. நடம் ஆடி வெண்ணீற்றை
 அணிந்த பித்தர் கோயில் என்க.
       2. 
        பொ-ரை: கயல்மீன் போன்றும், சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய்
 |