| 
         
          |  | இயலைவா 
            னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும் பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     2
 |  
         
          | 3120. | கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் |   
          |  | மூடல்சா 
            லவ்வுடை யார்முளி கானிடை ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
 பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.        3
 |  
         
          | 3121. | மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார் |   
          |  | மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள் பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
 பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.    4
 |  
  கொள்ளுமாறு அழகிய 
        தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர் சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும், அடியவர்களும்
 எண்ணுதற்கு அரிய. பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும்
 அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        கயல் போன்ற கண்ணியரும், சேல் போன்ற கண்ணியருமாகிய பல பெண்கள் (தாருகா வனத்து முனிபன்னியர்) பயலை - பசலை.
 பான்மையார் - தன்மையுடையவர். இயலை - தம் தன்மைகளை;
 நினைந்தோர்களுக்கு எண்ணுதற்கரிய பல பெயரையுடையராயிருப்பார். அவர்
 எழுந்தருளியிருக்குங் கோயில், அரதைப் பெரும்பாழி.
 
       3. 
        பொ-ரை: அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப்
 போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர்.
 அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது
 திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        கோடல் - பிச்சை கொள்ளுதல். மூடல் - போர்வை; தொழிலாகுபெயர். முளிகான்-சுடுகாடு. பீடர்-பெருமையுடையவர்.
       4. 
        பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப்
 |