பக்கம் எண் :

604திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3122. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
  கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     5

3123. புற்றர வம்புலித் தோலரைக் கோவணம்
  தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     6


பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப்பொருளாகியவர். பண்ணோடு கூடிய
பாடலில் விளங்குபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டு விளங்குபவர். அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது
திருஅரதைப்பெரும்பாழியே.

     கு-ரை: பஞ்சபூத சொரூபியாய் இருப்பார் என்பது முற்பகுதியின்
பொருள். வேதம் மெய்ப்பொருள் விரித்து ஓதுவார்-வேதத்தின் உண்மைப்
பொருளை விரித்து ஓதுவார், என்றது வேதத்துக்குப் பொருளருளிச் செய்த
(திருவிளையாடற் புராண) வரலாறு. பண்-இசை.

     5. பொ-ரை: சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர், மானும்,
வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில் மலரும் தேன்
துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர்.
சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் கோயில்
கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே.

     கு-ரை: வாயின்மொழி மறையர் என்க. மான், மழு, சூலம் உடைய
கையர். ஓடு; பிரிந்து, பொருள் தோறும் சென்று பொருளுணர்த்திற்று. கார்
ஆர்தரும் கொன்றை-கார்காலத்தில் நிறையப் பூக்கும் கொன்றை.
நறை-வாசனை; தேன். சென்னிமேல் தரும் பிறையர் என்க. தரும்-வைத்த.

     6. பொ-ரை: புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும்,
கோவணத்தையும் இடையில் அணிந்து, இரவில் நடனமாடும் சிவபெருமான்,
பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர்.
அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.