3133. |
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் |
|
சித்திரப்
புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே. 5 |
ஊதப்படும் சங்குகளின்
ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்றபோது
உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள்,
உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு
வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை
வணங்குவீர்களாக.
கு-ரை:
உயர்சேண் ஆர் வங்கம்-மிக்க நெடுந்தூரம் (வாணிகத்தின்
பொருட்டுச்) சென்ற கப்பல். வருகுறியால் மிகுசங்கம் ஆர்ஒலி தரு-திரும்பி
வரும் குறிப்பை ஊரார்க்கு உணர்த்த ஊதுவதால் பல சங்குகள்
ஆரவாரிக்கும்; ஒலியையுடைய மயேந்திரப்பள்ளி.
சேண்-நெடுந்தூரம்,
"சேணிகந்து விளங்கும் செயிர்தீர்மேனி" என்னும்
திருமுருகாற்றுப்படையாலும் அறிக.
5.
பொ-ரை: இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி
வருதல் போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால்
கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும்
இறைவனும், மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும்,
கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத்
தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக.
கு-ரை:
நித்திலத்தொகை - முத்துக்குவியல் பல. நிரைதரு -
வரிசையாகப் பொருந்திய. மலர் என-மலர்களைப்போல. சித்திரம் - விதம்
விதமான. புணரி - அலைகளில். சேர்த்திட - சேர்க்க.
கடலானது, இறைவனை
வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி
வருதல் போல முத்துக்குவியலை அலையினால் அடித்து வருகிறது என்பது
முன் னிரண்டடிகளின் கருத்து.
கைத்தலம் மழுவன்
- கையினிடத்து மழுவை ஏந்தியவன்.
|