பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)31. திருமயேந்திரப்பள்ளி609

  வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே.  2

3131. கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
  தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.      3

3132. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
  சங்கமா ரொலியகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கணா யகன்றன திணையடி பணிமினே.       4


மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய
அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை
வாகனமாகக் கொண்ட சிவபெருமானின், உயிர்களை நன்னெறியில்
செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: கண்டல்-நீர்முள்ளி. உலாம்-உலாவும். செண்டு-வட்டமாக நடை
பயிலுதல்.

     3. பொ-ரை: கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய
புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய
குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள்
நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும்;
வயல்-வயல்களில். கரும்பும் பொருந்திய, மயேந்திரப்பள்ளி என்பது
முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று ஒரு
சொல் வருவித்து, வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு விரிக்க.
மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத் தொகையிலும் மெலிமிக்கது,
எதுகை நோக்கி. மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு என்பதை "எம்மூர் ஆங்கண்"
என்பதுபோற் கொள்க.

     4. பொ-ரை: வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற
கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த