பக்கம் எண் :

608திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

31. திருமயேந்திரப்பள்ளி

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தர், சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதியாகிய
பிரமபுரத்தில், தோணிவீற்றிருந்தாரைத் தொழுது, தூய அணியாம் பதிகம்பாடி,
அருட்பெரு வாழ்வு கூர, நாளும் போற்றிய விருப்பின் மிக்காராய்
வைகும்நாளில், கீழ்பால், மயேந்திரப்பள்ளியிற் சென்று, இன்புற இறைஞ்சி
ஏத்திப் பாடிய தமிழ்ச் சொல் மாலை இத் திருப்பதிகம்.

பண்: கொல்லி

ப.தொ.எண்:289   பதிக எண்:31

திருச்சிற்றம்பலம்

3129. திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
  கரைதரு மகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே.       1

3130. கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
  கண்டலுங் கைதையுங் கமல்மார் வாவியும்


     1. பொ-ரை: கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய
வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும்
நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில், மேருமலையாகிய
வில்லால், அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி
செய்த, இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய
சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: திரைதரு - கடல் அலைகள் அடித்துவந்த, பவளம்.
கரைதரு-கரையில் ஒதுக்கப்பட்ட. (அகில்) வளை - சங்கு. பின்
இரண்டடிக்கு. எயில் எய்த அழகன், மயேந்திரப்பள்ளியுள் அழகன்,
அரவு: அரை அழகன், எனப்பொருள் கொள்க. அரை-இடுப்பு. ஆகுபெயர்.

     2. பொ-ரை: மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும்,
அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள்