பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)30. திருஅரதைப்பெரும்பாழி607

  சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.      10

3128. நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
  பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.   11

திருச்சிற்றம்பலம்


ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.

     கு-ரை: ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள். சேண்-ஆகாயம்.

     11. பொ-ரை: கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி
வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய
இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: நீரின்ஆர் - நீரினால் நிறைந்த. ஏரின் ஆர் - அழகால்
நிறைந்த. தமிழ்வ(ல்)லார்க்கு இல்லையாம் பாவமே.

திருஞானசம்பந்தர் புராணம்

பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.

                                 -சேக்கிழார்.