| 3125. |
சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை |
| |
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 8 |
| 3126. |
வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும் |
| |
ப எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 9 |
| 3127. |
நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் |
| |
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் |
8.
பொ-ரை: தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின்
வலிமையான பெரியதோள்களும், தலைகளும் நெரியுமாறு அடர்த்த
சிவபெருமான், அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு,
அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப்
பெரும்பாழியே.
கு-ரை:
சரிவு இலா - தளர்தல் இல்லாத. தோடலை - தோள் + தலை.
நெரிவில்லார் அடர்த்தார்-நெரித்தலால் முற்ற அடர்த்தவர். நெறி
குழலுக்குவரும் அடை. "வணர்வார் குழல்" எனவருவதும் அது.
9.
பொ-ரை: வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை
ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய நெருப்புப்
போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர். கருநிறத் திருமாலும்,
பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமையுடைய சிவபெருமான் கோயில்
கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
வரி அரா-கோடுகளை உடைய பாம்பு. மல்கும்-நிறைந்துள்ள.
எரியராவுஞ்சடை-நெருப்புப்போன்ற நிறமுடைய செஞ்சடை.
10.
பொ-ரை: சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற
சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது அழகுடையவ
|