| 
         
          | 3139. | வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் |   
          |  | நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
 உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.   11
 |  
        
        திருச்சிற்றம்பலம்
       
 
        வீற்றிருந்தருளும் 
        சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.       கு-ரை: 
        உடை துறந்தவர் - சமணர். உடைதுவர் உடையவர் - மருதந்துவரினால் தோய்த்த காவி உடையையுடைய புத்தர். துவர் - இங்கு
 மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று. மயேந்திரப் பள்ளியுள்; இடம்
 உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய முடை - தீ நாற்றம்.
       11. 
        பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின்
 வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய
 இத்திருப்பதிகத்தை 'இது நம்முடைய கடமை' என்ற உறுதியுடன் நாவினால்
 பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த
 இடத்தினை அடைவார்கள்.
       கு-ரை: 
        நம்பரம் - நமது கடமை. பரம் - பாரம். வம்பு - மணம். உம்பர் + ஆர் = தேவர்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  வைகும்அந் நாளிற் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம்
	செய்பொழிற் குருகா வூருந் திருமுல்லை வாயில் உள்ளிட்டெய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
 தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
 -சேக்கிழார்.
 |  |