| 
       பதிக வரலாறு:      திருவுடைப் 
        பிள்ளையார் தமது திருக்கையால் இட்ட ஏடு, மாதவர் மனம், பிறவியாற்றில் சென்றாற்போல், வைகையாற்றில் எதிர்த்து, நீர்
 கிழித்துப் போகும் உண்மையால், இரு நிலத்தோர் எல்லார்க்கும் இதுவே
 மெய்ப்பொருள் என்பதைக் காட்டிற்று. "எல்லாப் பொருளும் எம்பிரான்
 சிவனே" என்று எழுதும் அவ்வருளேட்டினை, வையை நீரினின்று
 தொடர்ந்தெடுப்பதற்கு வேண்டிக் காற்றென விசையிற்செல்லும் கடும்பரி
 ஏறிக்கொண்டு, அதன்பின் சென்றார் குல்சிறையார். அவ்வேடு அதன்
 மேலும் செல்லாமல் தங்கற்பொருட்டு முற்றுயர் கொடியினாரைப்
 பாடியருளியது இத் திருப்பதிகம்.
 பண்: கொல்லி 
         
          | ப.தொ.எண்:290 |  | பதிக 
            எண்: 32 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3140. | வன்னியு மத்தமு மதிபொதி சடையினன் |   
          |  | பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட வடியவர்
 இன்னிசை பாடல ரேடகத் தொருவனே.     1
 |  
        
        திருச்சிற்றம்பலம்
       
       1. 
        பொ-ரை: வன்னியும், ஊமத்த மலரும், சந்திரனும் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானின் பொன்போன்ற திருவடிகளைப்
 புதுமலர்களைக் கொண்டு பெருமையுடைய அந்தணர்கள் போற்றி வழிபடவும்,
 அடியவர்கள் இன்னிசையுடன் பாடிப் போற்றவும் ஒப்பற்ற இறைவனான
 சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
       கு-ரை: 
        மத்தம் - பொன்னூமத்தை, மதிபொடி - மதியை மறைக்கும். பொன் இயல் - பொன்போன்ற. திருவடி - (பொன்னார்) திருவடி.
      அடியவர் இன் 
        இசைப்பாடல் அர் - அடியவர்களின் இனிய இசைப்பாடல்களையுடைய (ஏடகத்து ஒருவன்)
 |