3148. |
குண்டிகைக்
கையினர் குணமிலாத் தேரர்கள் |
|
பண்டியைப்
பெருக்கிடும் பளர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே. 10 |
3149. |
கோடுசந்
தனமகில் கொண்டிழி வைகைநீர் |
|
ஏடுசென்
றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
சேர்க்கப்படும் வைகையின்
கரையில், அன்னப் பறவையாகப் பிரமன்
திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும்
இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான் திருவேடகத்தில்
வீற்றிருந்தருளும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.
கு-ரை:
பொருதிரை - கரையை மோதும் அலைகளாற் கொணர்ந்த
பொன்னும், மணிகளும், சந்தனம் அகில் மரங்களும் கொண்ட வைகை.
10.
பொ-ரை: கையில் குண்டிகையேந்திய சமணர்களும், இறை
உண்மையை உணராத புத்தர்களும், உண்டு வயிற்றைப் பெருக்கச் செய்யும்
பாவிகள். அவர்கள் இறைவனை வணங்காதவர்கள். அவர்களின் உரைகளைப்
பொருளாகக் கொள்ளவேண்டா. வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை
மலரையும், வன்னியையும் மாலையாக அணிந்த சடைமுடியுடைய,
திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானை ஏத்தி
வழிபடுங்கள்.
கு-ரை:
பண்டி - வயிறு. பளகு - பாவம். "பளகு அறுத்து உடையான்
கழல் பணிந்திலை" (தி.8 திருச்சதகம்-35) இண்டை - தலைக்கு அணியும்
மாலை.
11.
பொ-ரை: யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை
அலைகள் வாயிலாகக் கொண்டுவரும் வைகைநீரில் எதிர் நீந்திச் சென்ற
திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற
இறைவனை நாடிப்போற்றிய, அழகிய புகலியில்
|