பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)32. திருஏடகம்619

அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன்
ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளிலிருந்து நீங்கப்
பெற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: கோடு - யானைத்தந்தம். ஏடுசென்று அணைதரும் ஏடகம்.
இப்பாடல் அகச்சான்று குறிக்கும் பாடல்களில் ஒன்று (தி.12 திருஞா.புரா.850.)

திருஞானசம்பந்தர் புராணம்

ஆற்றின்மேற் செல்லும் ஏடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லுங் கடும்பரி ஏறிக்கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்;
ஏற்றுயிர் கொடியி னாரைப் பாடினார் ஏடு தங்க.

 
ஏடகம் பிள்ளை யார்தம் வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாருங் கூடிக்
காடிடமாக ஆடுங் கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு நின்றஏ டெடுத்துக் கொண்டார்.
 

தலைமிசை வைத்துக் கொண்டு தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டுசென் றணைவார்தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம் உண்டவர்தம்பால் வந்தார்.

                                 -சேக்கிழார்.