|   | 
          நெறிதரு 
            வேதியர் நித்தலு நியமஞ்செய் 
            செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.       4 | 
         
       
	
       
      
         
          | 3154.  | 
           பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள் | 
         
         
          |   | 
          தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக் 
	கொண்டிரைக் கொடியொடுங் குருகினி னல்லினம் 
            தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.     7 | 
         
       
	   
       நற்பண்புடைய அடியவர்கள் 
        தன் திருவடியைத் தொழுது போற்றவும்,  
        சிவாகமநெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசை  
        செய்யவும் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடர்ந்த  
        சோலைகள் சூழ்ந்த அழகிய திருவுசாத்தானம் ஆகும். 
            கு-ரை: 
        மறி - மான் கன்று. சிவனடியாரெனக் குறிக்கும் கோலமும்  
        சீலமும் உடைய அடியார் தொழ என்பது இரண்டாம் அடியின் பொருள்.  
        நெறிதரு - நெறியில் ஒழுகுகின்ற. நித்தம் - நித்தல் என்றாயது கடைப்போலி.  
        செறிதரு - அடர்த்தியான பொழில். 
            5,6. 
        * * * * * * * 
            7. 
        பொ-ரை: பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால் ஆரவாரித்துப்  
        பிரமனும், திருமாலும், மற்றுமுள்ள பல பக்தர்களும் அடிமைத் திறத்தினால்  
        மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி வழி பட, இறைவன்  
        வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக் கவரும் காக்கையோடு,  
        நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற, நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த  
        திருவுசாத்தானம் ஆகும். 
            கு-ரை: 
        பண்டு - தொன்றுதொட்டு. இரைத்து - மகிழ்ச்சியால்  
        ஆரவாரித்து. தொண்டு-அடிமைத்திறத்தினால். மந்திரத்தைப் பிறர் காதிற்  
        படாதவாறு உச்சரிக்க; தோத்திரம் பிறரும் கேட்குமாறு ஓசையோடும் பாடுக  
        என்பது ஆகம வசனக் கருத்து என்ப. கொண்ட இரை - மீன் முதலிய  
        இரைகளைக் கவர்ந்த. கொடியொடும்-காக்கையோடும். குருகினில் நல்  
        இனம்-பறவைகளில் நல்ல சாதிக் கூட்டங்கள்  
	 |