|
முல்லையார்
புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே. 2 |
3152. |
தாமலார் போலவே தக்கனார் வேள்வியை |
|
ஊமனார்
தங்கனா வாக்கினா னொருநொடிக்
காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல்
சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே. 3 |
3153. |
மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான் |
|
குறிதரு கோலநற் குணத்தினா
ரடிதொழ
|
முன்பல்லிருந்த உலர்ந்த
பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன்.
முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும்
சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில் விளங்குபவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
கொல்லை - முல்லைநிலம். பல்லை ஆர்தலை - பல்லை
முன் உடையதாயிருந்த தலை. படுதலை - உலர்ந்த மண்டையோடு. பல்லில்
வெள்ளைத் தலையன்' (தி.7.ப.81.பா.10.) என வருதலால் இங்ஙனம் பொருள்
கூறப்பட்டது. முல்லை ஆர்புறவு - முல்லைக் கொடிகளை உடைய முல்லை
நிலம்.
3.
பொ-ரை: தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன் செய்த
வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்றதாக்கினான். ஒரு
நொடியில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு செய்த நெற்றிக்
கண்ணுடைய கடவுளாவான். அப்பெருமான் அடியவர்கட்கு நன்மை தரும்
பொருட்டு வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
பகையும் நட்புமில்லாத பரஞ்சுடர். பகைவன் போலாகித்
தக்கனார் வேள்வியை ஊமன் கனவுபோல ஒன்றுமில்லாமற் செய்தவன்.
ஊமனார் இகழ்ச்சிக்குறிப்பு; தாம் ஆக்கினான். ஒருமை பன்மை மயக்கம்.
சேமம் ஆ(க) - உலகினருக்கு நன்மை உண்டாதற் பொருட்டு. பொ-ரை:
இள மான்கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி, பெருமையுடைய இடப
வாகனத்திலேறி, சிவவேடப் பொலிவுடைய
|