பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)37. திருப்பிரமபுரம்649

3199. பித்தனைப்பிர மாபுரத்துறை
       பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
     செய்துநன்பொருண் மேவிட
வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன்
     வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
     போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே.         10

திருச்சிற்றம்பலம்


அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில்
கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன்
எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான்.
அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக!

     கு-ரை: உடுக்கை - ஆடை. பண்டு அடக்கு சொல் - தொன்று
தொட்டு வந்து சற்சமயக் கருத்துக்களை. தண்டு (ஒடு) - யோக தண்டத்துடன்.
அக்கு - செபமாலை, இவை யோகரூபங் குறித்தவை. ஒடுக்கிய -
உமாதேவியாரை இடப்பாகத்தே சேர்த்த. மைந்தன் - ஆண்மையுடையோன்.
இது போகரூபங் குறித்தது. ஒடுக்கிய என்ற வினைக்குச் செயப்படுபொருள்
வருவித்துரைக்கப்பட்டது. ஆக இறைவனது மூன்று ரூபமும் இதனுள்
அமைந்தமை காண்க. ‘யோகியாய்’ (சிவஞானசித்தியார். 50) ஒருவனே
மூன்றுருவும் கொள்ளுதல் அவனது திருவிளையாடல் என்பார் ‘கூத்தன்’
என்றார்.

     10. பொ-ரை: பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும்
ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, மெய்த் தவநெறிகளில்
நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற
சிந்தையில், ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப்
பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க
இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர்.

     கு-ரை: சிந்தையுள் தங்கி நா நவின்று எழுந்த, மாலைகள். நன்பொருள்
- வீடு. போற்றி செய்யுங்கள் - செய்வீரேல், மெய்யுணர்ந்த மாந்தர்
ஆவீர்கள், நன்பொருள், ஞானம் எனலும் பொருந்தும்.