3209. |
நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள் |
|
நவிலுமின்உமைக்
கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதரோது மதுகொளா
தமரரானவ ரேத்தவந்தகன்
தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே. 10 |
3210. |
கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் |
|
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
|
10.
பொ-ரை:தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு
பிறப்புக்களையும் அறுக்கும் மெய்யடியார்களே! உங்களை வினவுகின்றேன்.
விடை கூறுவீர்களாக. பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி உண்டாகாதவாறு
குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும்
வீரட்டன், தமது சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச்சாரும்
வழிகளை எடுத்துரைக்காத புத்தர், சமணர்கள் உரைக்கும் உலகியல்
அறங்களான கொல்லாமை, பரதுக்க துக்கம் இவற்றை மறுத்து, தேவர்கள்
ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன்?
கு-ரை:
நமர் - நம்மவர். சுற்றத்தார் ஏழுபிறப்பு அறுக்கும் மாந்தர்காள்
என்றது. ஒருவன் சிவஞானியாய் வீடு பேறு அடைவானாகில் அவனது
இருபத்தொரு வமிசத்திலுள்ளவர்கட்கும் நரக மில்லை என்ற கருத்து. அது
திருவாசகம். "மூவேழ்சுற்றம் முரணுறு நரகிடை ஆழமே அருள் அரசே
போற்றி"என்பதனால் அறிக. ஈரேழுலகை ஏழுலகு என்பது போல வானவர்
மக்கள் நரகர் ஆகிய ஒவ்வோர் வகையிலும் ஏழு பிறப்பு என்றுணர்க.
கமர்-பூமி வெடிப்பு. நீர் பாய்வதால் அது அழிகின்றது. தமர் அழிந்து -
தமது சமயத்தவர் பயனெய்தாது அழிய. அழிந்து வினையெச்சத்திரிபு.
கொல்லாமையும் பரதுக்க துக்கமுமாகிய அவர்களின் கொள்கையை மறுத்து,
அவர் தொழிலினும் தாழ்ந்ததாக அந்தகாசுரனைச் சூலத்திற் குத்திக்
கொன்றது தகுமா?
11.
பொ-ரை: அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய், சோலைகள்
சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது
|