| 
         
          |  | திருத்தமாந்திகழ் 
            காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்
 ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
 உரைசெய்வார் உயர்ந்தார்களே.         11
 |   
        
        திருச்சிற்றம்பலம் 
       
 மறைந்திருந்து மனத்தைக் 
        கவரும் கள்வனாய், சொல்லின் பொருளாக இருக்கும், அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம்
 வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில் அவதரித்த,
 இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய
 செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத் தனித்தும், பலராகச்
 சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        கருத்தனை - "மனத்துள் நின்ற கருத்தானை". கள்வனை - மேற்கூறிய காரணங்களால் இத்தன்மையன் இறைவன் ஆகான் எனச் சைவம்
 சாரும் ஊழிலார் மறுக்கும் வண்ணம், மறைந்து நிற்றலின் கள்வன் என்றார்.
 வினாவுரையாகிய சம்பந்தன் நிரப்பிய செந்தமிழ் பாடுவார் உயர்ந்தார்கள்.
      பதிகக் குறிப்பு: 
        புத்தர் சைவத்திற் குறை கூறும் கூற்றுக்களையே வினாவாக வைத்து மணிவாசகப்பெருமான், திருச்சாழலில் வினாவியதை
 ஒக்கும் இப்பதிகம். அட்டவீரட்டத்தில் இத்தலம் அயனைச் சிரங்கொய்த
 தலம்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  கண்டியூர் வீரட்டர் கோயில்எய்திக்கலந்தடி யாருடன் காதல் பொங்கக்
 கொண்ட விருப்புடன் தாழ்ந்தி றைஞ்சிக்
 கு     லவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
 தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று
 தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
 அண்டர்பிரான்தன் அருளின் வண்ணம்
 அடியார் பெருமையிற் கேட்டருளி்.
 -சேக்கிழார்.
 |  |