பதிக வரலாறு:
மதுரையில்,
பாண்டியன், மங்கையர்க்கரசியாரை நோக்கி, "நீ
வருந்தாதே" என்று சொல்லி அழைத்து, சமணரை நோக்கி "என் வெப்பு
நோயை ஒழிக்குந்திறத்தில் நீவிரும் இச்சிவனடி யாரும் முடிவாகத் தேறிய
தெய்வத் தன்மையைத் தெரிப்பீர்" என்றான். அப்போது, மங்கையர்க்கரசியார்
அஞ்சினார். அதை உணர்ந்த திருஞானசம்பந்தர், அந்நற்றவத் திருவை
நோக்கி "மானினேர் விழிமாதராய், எனைப்பாலன் என்றுநீ நனி அஞ்ச
வேண்டா. நிலையிலா அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன்" என்று
பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
கொல்லி
ப.தொ.எண்:297 |
|
பதிக
எண்: 39 |
திருச்சிற்றம்பலம்
3211. |
மானினேர்விழி மாதராய்வழு |
|
திக்குமாபெருந்
தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ
னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
வாலவாயர னிற்கவே. 1 |
1.
பொ-ரை: மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே!
பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். "பால்வடியும்
நல்ல வாயையுடைய பாலன்" என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால்
ஆனைமலை முதலான இடங்களிலிருந்து
வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு
விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன்
அல்லேன்.
கு-ரை:
மானின் நேர்விழி - மருண்டு பார்க்குந்தன்மையால்
|