3212. |
ஆகமத்தொடு மந்திரங்க |
|
ளமைந்தசங்கத
பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
வாலவாயர னிற்கவே. 2 |
மாதர்விழிக்கு மானின்
விழி உவமை. மாதராய் - மாதராள் என்பதன்
விளி. பானல்வாய் - (பால்+நல்+வாய்) பால்வடியும் நல்ல வாயையுடைய.
ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ. பரிவு - இரக்கம். எய்திடல் -
அடையாதே. பல அல்லல் சேர் - பல துன்பங்களையும் பிறர்க்கு
விளைவிக்கின்ற. பிற வினைதொக்கது. திருவாலவாய் அரன்துணை
நிற்கையினால் எளியேன் அலேன்.
2.
பொ-ரை: வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு
பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய
பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய
யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு
நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன்துணை நிற்பதால்
. கு-ரை:
பங்கமா(க) (பக்கமாக) புரிந்து எனக் கூட்டுக. சங்கதம் -
சமஸ்கிருதம் என்பதன் திரிபு. பாகதம் - ப்ராகிருதம் என்பதன் சிதைவு.
(வடமொழி) வடமொழியின் திரிபு ஆகியமொழி இரண்டாம். எப்பொழுது
வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே என்று பேசுவது போன்றது.
பாகதத்தொடு இரைத்துரைத்த - பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச்
சொல்லிய.
சனங்கள்
- வைதீகமாந்தர். வெட்குறு - வெட்கமடையத்தக்க. பங்கம்
ஆ - பங்கப்படவும். வெட்குறுபக்கமாப் புரிந்து - பாகதத்தோடு
இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து. மா - பெரிய. கதம் -
கோபத்தை உடைய. கரிபோல், திரிந்து - செருக்குற்று. மாசு சேர் ஆகதர்
- ஆர்கதர் என்பதன் திரிபு. நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு
சேர் என்றார்.
|