பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)39. திருஆலவாய்661

3213. அத்தகுபொரு ளுண்டுமில்லையு
       மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி
     லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
     சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.                  3

3214. சந்துசேனனு மிந்துசேனனுந்
       தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு
     முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு
     செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.                  4


     3. பொ-ரை: கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது, இல்லை
என்றும் சொல்லமுடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும்,
ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது
கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப்படும்படி
ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை
பேசுபவர்கட்கு, நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன்.

     கு-ரை: அத்தகு பொருள் - கடவுள் என்ற பொருள் உண்டும் ஆம்
இல்லையும் ஆம். உண்டென்றும் சொல்லமுடியாது. இல்லையென்றும்
சொல்லமுடியாது என்னும் அத்திநாத்தி, என்பது அவர்கள் மதக்கொள்கை.
ஏத்தும் முன்பின் முரண்படச்சொல்லி, வாதில் அழிந்து தோற்றுக்
கவிப்பெயரெச்சத்தின் மடிந்து. ஒடிந்து நக்கம் - நக்நம் என்ற வடசொல்லின்
திரிபு. சித்திரர்க்கு - அழகென்று கொள்பவர்களுக்கு (எளியேன் ஆகேன்.)

     4. பொ-ரை: சந்தசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய
கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக்