| 
       பதிக வரலாறு:      எல்லா 
        உலகும் உய்யப் பெறற்கு அரும் பேறு பெற்றருளும் பிள்ளையார், மறப்பதற்கு அரிய காதலுடன் வந்து எய்தி மகிழ்ந்து
 உறைவாராய், அறப்பெருஞ் செல்வக் காமக்கோட்டம் அமர்ந்த
 செழுஞ்சுடரை ஒருபோதும் தப்பாதே உள் உருகிச் சேவடியில் பணிந்து
 இசைத் திருப்பதிகத் தொடை பல புனைந்தார். அவற்றுள் ஒன்று
 இத்திருவிருக்குக்குறள். வட மொழி வேதத்தில் உள்ள இருக்குகளைப்
 போலத் தமிழில் அமைந்த இருக்கு (மந்திரங்கள்) இவை.
 திருவிருக்குக்குறள்பண்: கொல்லி
 
         
          | ப.தொ.எண்:299 |  | பதிக 
            எண்: 41 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3233. | கருவார்கச்சித், திருவேகம்பத் |   
          |  | தொருவாவென்ன, 
            மருவாவினையே.       1 |  
         
          | 3234. | மதியார்கச்சி, நதியேகம்பம் |   
          |  | விதியாலேத்தப், 
            பதியாவாரே.            2 |  
       1. 
        பொ-ரை: யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி
 வணங்க வினைவந்து சாராது.
       கு-ரை: 
        கரு - கர்ப்பம் ...... ஏக ஆம்பரம் - ஏகம்பம் என மரீஇயிற்று. ஒற்றை மாமரத்தினடி, கோயிலின் பெயர். வினை - வினைகள், பால்பகா
 அஃறிணைப்பெயர்.
       2. 
        பொ-ரை: மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில் கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி
 அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய்
 விளங்குவார்கள்.
       கு-ரை: 
        மதி ஆர்கச்சி - மதி தவழும் மாடங்களையுடைய கச்சி.  |