| 
         
          | 3235. | கலியார்கச்சி, மலியேகம்பம் |   
          |  | பலியாற்போற்ற, 
            நலியாவினையே.       3 |  
         
          | 3236. | வரமார்கச்சிப், புரமேகம்பம் |   
          |  | பரவாவேத்த, 
            விரவாவினையே.         4 |  
         
          | 3237. | படமார்கச்சி, இடமேகம்பத் |   
          |  | துடையாயென்ன, அடையாவினையே.     5 |  
         
          | 3238. | நலமார்கச்சி, நிலவேகம்பம் |   
          |  | குலவாவேத்தக், 
            கலவாவினையே.        6 |  
       3. 
        பொ-ரை: விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய
 பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால்
 வரும் துன்பம் இல்லை.
       கு-ரை: 
        கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி, இதனை 'மலிதேரான்' என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும், பெரிய புராணத்தாலும்
 அறியலாம். பலி - பூசைக்குரிய பொருள்; காரிய ஆகுபெயர்.
       4. 
        பொ-ரை: தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும். இத்திருத்தலத்தில்
 திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும்
 .      கு-ரை: 
        பரவா - பரவி, துதித்து, உடன்பாட்டு வினையெச்சம். கச்சிப்புரம் - காஞ்சிபுரம்.
       5. 
        பொ-ரை: சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள்
 தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.
       கு-ரை: 
        படம்-மாடங்களில் ஆடும் கொடியினையுடைய. உடையாய் - தலைவனே. என்ன வினை அடையா.
       6. 
        பொ-ரை: நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.
 |