பதிக வரலாறு:
பதிகவரலாறு இல்லாதவற்றுள் இதுவும் ஒன்று.
பண்: கௌசிகம்
ப.தொ.எண்:301 |
|
பதிக
எண்: 43 |
திருச்சிற்றம்பலம்
3255. |
சந்த மார்முலை யாடன கூறனார் |
|
வெந்த
வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே. 1 |
3256. |
மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் |
|
தேனி
டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே. 2 |
1.
பொ-ரை: இறைவர் அழகிய திருமுலைகளையுடைய
உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். வெந்த
திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர். நறுமணம் கமழும்
சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய
சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன.
கு-ரை:
முலையாள் தனகூறனார்; தன - தன்னதாகிய. இது குறிப்புப்
பெயரெச்சம். கந்தம் - நறுமணம். ஈற்றடி, திருக்காளத்தி முதற் பாட்டின்
(தி.3ப.36பா.1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது.
2.
பொ-ரை: மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட
சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர்.
நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும்
அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.
|