பக்கம் எண் :

684திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3257. மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
  பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர்போற்ற இருக்குமே.           3

3258. புற்றி னாகமும் பூளையும் வன்னியுங்
  கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுட னேத்தி யுணருமே.           4


     கு-ரை: வரம்புகளில் மலர்ந்த தாமரை முதலிய மலர்களின் மணம்
பரவுவதால் கானிடம் கொளும் தண்வயல் காழி என்றார். கான் - வாசனை.
மானிடங்கொண்டு - மானை இடப்பக்கத்தில் ஏந்தி. ஊன் - உடம்பு.
இடங்கொண்டு என்பது. "எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்" என்ற
திருவாசகத்திலும் காண்க.

     3. பொ-ரை: நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை
உடையவரும், வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி,
படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும், இளமான்கன்றை
இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான், அந்தணர்கள்
போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: பை - படம், அரவு ஆட்டும், படிறனார்; வஞ்சகர், அரவு
ஆட்டும். மான்மறி - மான்கன்று. மை - கருமைநிறம், கண்டத்தர்
சென்னியர், படியறனார், மான்மறியார். குறிப்பு:- இன்னதெனத்
தோற்றாமையால் படிறனார் என்றார். அதன் கருத்து இத்திருமுறை (தி.3
ப.107.பா.10.) காண்க. தலைவனாய் முனிவர் போற்ற இருப்பர் என முடிக்க. ஒருமை பன்மை மயக்கம்.

     4. பொ-ரை: புற்றில் வாழும் பாம்பையும், தும்பைப்பூ மாலையையும்,
வன்னிப் பத்திரத்தையும் தமது கற்றையான நீண்ட சடைமேல் அணிந்து,
சீகாழியில் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின்
பொன்போன்ற திருவடிகளைச் சமயம் நேர்ந்தபொழுது தாமதியாது உடனே
துதித்துத் தியானித்து அவனருளை உணர்வீர்களாக.

     கு-ரை: பாம்பும், பூளைப்பூவும், வன்னிப்பத்திரமும் சடையில்,