| 3259. |
நலியுங் குற்றமு நம்முட னோய்வினை |
| |
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே. 5 |
| 3260. |
பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர் |
| |
பண்ணு
மேத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய வடிகள் சரிதையே. 6 |
வைத்தவர் - அணிந்தவர்,
வைத்தல் - அணிதல். "மத்தமும் மதியமும்
வைத்திடும் அரன்மகன்" என்று திருப்புகழிலும் வருகிறது. உற்றபோது -
அமயம் நேர்ந்தபோது, உடனே (தாமதியாது). ஏத்தி - துதித்து. உணரும் -
தியானித்திருங்கள். உணரும் - ஏவற்பன்மை.
5.
பொ-ரை: நம் மனத்தை வருத்தும் குற்றங்களும், தீவினைகளால்
நம் உடலை வருத்தும் நோய்களும், மெலிந்து விலக விரும்புவீர்களாயின்,
கையால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பத்தை
ஓட்டும் அந்தணர்கள் வாழ்கின்ற கடல்சூழ்ந்த சீகாழியில், அலைகளையுடைய
கங்கையைத் தாங்கிய செஞ்சடையானாகிய சிவபெருமானின் திருவடிகளைப்
போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
நலியும் நமது மனத்தைப் பற்றி வருத்துகின்ற, குற்றமும்
கவலைகளும் நம்உடல் (நலியும்). நோய்வினை - நம் உடலைப்பற்றி
வருத்துகின்ற பிணிகளாகிய தீவினைகளும். மெலியும் - மெலிந்தொழியும்.
ஆறு அது - அந்தவழியை வேண்டுதிரேல், வெய்யகலி கடிந்த கையார் -
கையாற் செய்யும் வேள்வி முதலியவற்றால் உலகில் துன்பம் வாராது ஓட்டிய
அந்தணர்கள் வாழும், கடற்காழி என்றது, "கற்றாங்கு எரியோம்பிக்கலியை
வாராமே செற்றார் வாழ்தில்லை" (தி.1ப.80.பா.1) என்றதை, "சமன் செய்து
சீர்தூக்குங்கோல் போல் அமைந்தொருபாற் கோடாமை" (குறள்.118)
என்பதற்கேற்பக் கவலை என்றும் தந்துரைத்து நலியும் என்பதனைப்
பின்னும் கூட்டப்பட்டது. அலை - கங்கையைக் குறித்தது சினையாகுபெயர்.
6.
பொ-ரை: சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு
பாகமாக உடையவர். பேய்க்கணங்கள் சூழ ஆடுபவர். உலகத்தார்
|