பக்கம் எண் :

690திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  கானி லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே.          2

3268. கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர்
  பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே.     3

3269. பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
  தண்ண லங்க லுகந்த தலைவனார்


பெருமான், கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான்
போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார்.

     கு-ரை: வான்இலங்க - வானம் பிரகாசிக்க விளங்கும் இளம் பிறையை.
அலங்கல் உகந்த - மாலையாக விரும்பி. (தலைவனார்) கான் - (சோலை
முதலியவற்றின்) நறுமணம். இலங்க - மிக. வரும் - பரவி வருகின்ற.
(கழிப்பாலையார்) மான் - மானின். நலம் - அழகு. மட நோக்கு -
மடப்பத்தோடு நோக்குதலையுடையவளாகிய; அம்பிகையோடும்
திருக்கழிப்பாலையுள் எழுந்தருளியுள்ளார் என்க. தலைவனார் - எழுவாய்.
கழிப்பாலையர் - பயனிலை.

     3. பொ-ரை: இறைவர் எருதுக் கொடியுடையவர். காலனைக் காலால்
உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை
ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை
யார்தான் அறிந்துகொள்ளமுடியும்? ஒருவராலும் முடியாது.

     கு-ரை: கொடியின் கண் கொண்ட இடபத்தையுடையவர் -
இடபக்கொடியை உடையவர். ஆமை; ஆமையோட்டைக் குறிப்பதால்
முதலாகுபெயர். கடி - நறுமணம்.

     4. பொ-ரை: பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள்
பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி
அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும்