பதிக வரலாறு:
சண்பை
ஆண்டகையார், திருவேட்களத்தில் தங்கியிருந்து ஐயன்
திருக்கூத்துக் கும்பிட அணைவுறும் நாள்களுள், திருக்கழிப் பாலையுள்
செம்மாலை வேணித் திருவுச்சிமேவி உறை அம்மானை அணைந்துபாடிய
மெய்ம்மாலைச் சொற்பதிகம் இது.
பண்: கௌசிகம்
ப.தொ.எண்:302 |
|
பதிக
எண்: 44 |
திருச்சிற்றம்பலம்
3266. |
வெந்த குங்கி லியப்புகை விம்மவே |
|
கந்த
நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே. 1 |
3267. |
வானி லங்க விளங்கு மிளம்பிறை |
|
தான லங்க
லுகந்த தலைவனார் |
1.
பொ-ரை: நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப்பெருக்கால் நறுமணம்
கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான்
அழிவில்லாதவர். இன்ன தன்மையர் என்று அளந்தறியமுடியாதவர்.
அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும்.
கு-ரை:
விம்ம - மிக. அந்தமும் அளவும் எனவே, ஏனைய ஆக்கமும்
கொள்ளப்படும். "ஆக்கம் அளவு இறுதியில்லாய்" என்பது திருவாசகம்.
ஆக்கம் - பிறப்பு. அந்தம் - இறப்பு. அறியாத - அறியப்படாத;
செயப்படுபொருளுணர்த்தும் படுவிகுதி குன்றியது, அறியப்பாடாத என்று
கூறினாரேனும் இல்லாத என்பது பொருள். சந்தம் - தன்மை. அது
திருக்கோவையாரில் "அடிச்சந்தம்" என வருவதாற் காண்க. அவர் மேவிய
சாந்தம் - அவர் மேவிய சாந்தநிலையும் அத்தகையதே (அறியப்படாததே).
என்பது குறிப்பெச்சம். ஆல் - ஆசை.
2.
பொ-ரை: வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை
மாலைப்போல் விரும்பி அணிந்த தலைவரான சிவ
|