3265. |
கானல் வந்துல வுங்கடற் காழியுள் |
|
ஈன மில்லி
யிணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம் வீசும்
கடலை அடுத்த சீகாழியில், அழிவற்று என்றும் நித்தப் பொருளாக
விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கிடும்
ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை மனமகிழ்ச்சியுடன் பாட
அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும்.
கு-ரை:
ஈனம் இல்லி - சிவபெருமான், காரணப்பெயர். மானம் -
பெருமை. அது வீடு பேற்றைக் குறிக்கும். " உரைத்த நாற் பயனுட்
பெரும்பயன் ஆயது ஒள்ளிய வீடு, அது உறலால் தரைத்தலைப் பேரூர்
என்பர்கள் சிலர்" என்பது பேரூர்ப்புராணம்.
திருப்பூவணநாதர்
உலா
மூவர் பெருமை
"........................
தந்தைதாய்
வேணுபுரக் கோலம் வீழி மிழலையிடைப்
பேணும் வகைபார்த்த பிள்ளையும் - பூணும் அருள்
மெய்யாக் கயிலைமலை வீற்றிருந்த தன்கோலம்
ஐயாற்றில் கண்டருள்என் அப்பனும் - எய்யாமல்
ஆடிச்சிவக்கும் அடியைத்தென் ஆரூரில்
பாடிச் சிவப்பேற்றும் பாவலனும் ............."
- கந்தசாமிக் கவிராயர்.
|
|