பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)43. சீகாழி687

3263. காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
  மாலு நான்முகன் றானும் வனப்புற
ஓல மிட்டுமுன் றேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.     9

3264. உருவ நீத்தவர் தாமு முறுதுவர்
  தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.   10


செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய
திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை உடனாகக்
கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர்.

     கு-ரை: கொடி - பதாகைகள். தயங்கும் - விளங்குகின்ற. இடத்து -
இடப்பாகத்திலுள்ள, மாது.

     9. பொ-ரை: காலன் உயிரைப் போக்கிய இறைவன் திருவடியைத்
திருமாலும், பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய் ஓலமிட்டுத் தேடியும்
காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர்
பெருமையுடன் திகழும் சீகாழியாகும்.

     கு-ரை: "மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்றும் கீழிடந்து
மாலும் அறிந்திலன் .......... காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே"
என்ற கருத்து.

     10. பொ-ரை: தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின்
இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும், துவர் நிறம் ஊட்டப்பட்ட
ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை யற்றவர்கள். உங்களுக்கு நல்ல
காரியம் கைகூட வேண்டுமென்று விரும்பினீர்களேயானால், கடலை அடுத்த
சீகாழியில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச்
சரணடைந்து உய்வீர்களாக!

     கு-ரை: ஒருவன் - சிவனுக்கு ஒரு பெயர். "ஒருவனென்னும் ஒருவன்
காண்க". (தி.8 திருவா.-திருவண்டப்பகுதி. அடி - 43.)