பக்கம் எண் :

694திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3276. அந்தண் காழி யருமறை ஞானசம்
  பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே.         11

திருச்சிற்றம்பலம்


பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த
திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள்.

     கு-ரை: செய்ய - சிவந்த. நுண் - மெல்லிய. துவர் ஆடையினார்
- காவி உடையை உடைய புத்தர் (மெய்யில் நீராடாமையால்) உடம்பில்
அழுக்கு மிகுந்த. வீறு இலா - பெருமையில்லாத. கையர் - வஞ்சகராகிய
சமணர். வீறு - பெருமை. கையர் - வஞ்சகர்.

     11. பொ-ரை: அழகிய, குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த
அருமறைவல்ல ஞானசம்பந்தன், பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப்
பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய
இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை
ஆளுதற்கு உரியவராவர்.

     கு-ரை: அம்-அழகு. தண் - குளிர்ச்சி. சிந்தை - சிவனடிக்கு
இடமாக்கிய கருத்து, முந்தி - ஏனைய தவிர்த்தோர்க்கும் முன்னரே.
உலகு+ஆள்தல்=உலகாடல் - உலகை ஆளுதல்.

திருஞானசம்பந்தர் புராணம்

கைம்மான் மறியார் கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடி விரைக்கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட் டருந்தமிழும் பாடினார்.

                                -சேக்கிழார்.