பதிக வரலாறு:
திருவாரூர் அரசளிப்பவர்
அருளினால் அடியவர் குழுவும்
பரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது,
மெய்த்தொண்டர் குழாத்தின் எதிர்வணங்கி, முத்தமிழ் விரகர் இத்தமிழ்
பாடியருளினார்.
பண்: கௌசிகம்
ப.தொ.எண்:303 |
|
பதிக
எண்: 45 |
திருச்சிற்றம்பலம்
3277. |
அந்த மாயுல காதியு மாயினான் |
|
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 1 |
3278. |
கருத்த னேகரு தார்புர மூன்றெய்த |
|
ஒருத்த னேயுமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே. 2 |
1.
பொ-ரை: சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும்,
தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத நாயகன்.
என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம்
தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ!
கு-ரை:
உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது உலகின்
தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன். எம் எந்தை -
எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை. எம் என்றது பலதிறத்தினராகிய
அடியவரை. அது "உருத்திர பல் கணத்தார்""பல்லடியார்" என்பனவற்றால்
அறிக.
2.
பொ-ரை: இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக் கருதிப்
போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை
தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். ஒப்பற்றவர்,
|