| 3286. |
மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள் |
| |
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்றிரு வாரூரெம்
ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 10 |
| 3287. |
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் |
| |
சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
தாங்கிய இறைவர்,
மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில்
வீற்றிருந்தருளும் அடிகளாவார். அவர் என்னை அஞ்சாதே என்று அருள்
புரிவாரோ!
கு-ரை:
நேர்கிலா - சிந்திக்க மாட்டாத. கில் - ஆற்றல் உணர்த்தும்
இடைச்சொல். படியவன் - தன்மையன், வடிவினன் எனலும் ஆம். செடிகள்
- தீமைகள், பாவங்கள்.
10.
பொ-ரை: அழுக்கு உடம்பையுடைய சமணர்களும், துவராடை
அணிந்த புத்தர்களும், கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர்,
அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம்
இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ!
கு-ரை:
துவர் ஆடைமேற்கொள்ளும் - செந்நிறப் போர்வையைப்
போர்க்கும். காசை - காஷாய உடை. திவ்வியப் பிரபந்தம் 1658. காசை
மலர் போல்மிடற்றார். தேசம் - ஒளி.
11.
பொ-ரை: வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம் ஆகியவற்றைச்
சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை,
நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய
இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
கு-ரை:
ஓடு எண்ணுப் பொருளது. சென்னி - தலைமீது. வாய் -
திருவாயினால். பன்னு - சொல்லிய, வல்லார்க்குப் பாவம் இல்லை.
|