பக்கம் எண் :

710திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3308. செந்தெ னாமுர லுந்திரு வாலவாய்
  மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.          11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: மீன் கவர்வார் புத்தர். அழிப்பவர் - நன்மார்க்கங்களை
யெல்லாம் அழிப்பவர்கள். தெழிக்கும் - ஒலிக்கின்ற. பூம்புனல் - மெல்லிய
நீர். நல்கிடே - தெரிவித்தருள்வீராயின்.

     11. பொ-ரை: வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள்
நீங்கச் சந்தமுடைய தழிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட
மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க
ஓதுவீர்களாக!

     கு-ரை: தமிழ்கேட்ட - தமிழாற் கேட்ட என்பது ஒவ்வொரு பாடலிலும்
திருயுள்ளமேயெனக் கேட்டமையைக் குறிக்கிறது. பழி நீங்கப் பகருமின் -
பழி நீங்குவதற்குச் சொல்வீராக.

திருஞானசம்பந்தர் புராணம்

நோக்கிட விதியி லாரை நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே! திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனா யுள்ள பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப் பதிகத்தான் நுவல லுற்றார்.

 


கானிடை ஆடு வாரைக் காட்டுமா வுரி முன் பாடித்தேனலர்
கொன்றை யார்தந் திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை வாதில்வென் றழிக்கப் பாடி.

                                 -சேக்கிழார்.