பதிக வரலாறு:
திருநெய்த்தானப்
பதியினை வணங்கிப் பாடித் திருமழபாடியை
அடைந்து, பொன்னார் மேனியனாகிய வயிரமணித் தூணை வலங்கொண்டு
எய்தித் தாழ்ந்து எழுந்து நின்று தொழுது ஆடிப் பாடிய நறுஞ்சொல்
மாலைத் தொடை இத்திருப்பதிகம். இதில் இரண்டாவது திருப்பாட்டில்
உள்ள திருவைந்தெழுத்தை உணர்ந்து, அக்காலத்துச் சிவஞானிகளின்
நிலையை ஊகம் புரிந்து வாழ்தல் உத்தமர் கடனாம்.
பண்:
கௌசிகம்
ப.தொ.எண்:306 |
|
பதிக
எண்: 48 |
திருச்சிற்றம்பலம்
3309. |
அங்கை
யாரழ லன்னழ கார்சடைக் |
|
கங்கை
யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழ வார்தக வாளரே. 1 |
1.
பொ-ரை: இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன். அழகிய
செஞ்சடையில் கங்கையைத் தாங்கி, இடம், பொருள், காலம் இவற்றைக்
கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின்
இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக்
கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர்.
கு-ரை:
சடைக் கங்கையான் - சடையில் தாங்கிய கங்கையை
உடையவன். கடவுள் - எவற்றையும் கடந்தவன்; சிவபெருமானுக்கொரு
பெயர். கடவுளே போற்றி என்பது திருவாசம். (தி.8.திருச்சதகம் - 64).
கடவுள் - கடத்தல். உள் தொழிற்பெயர் விகுதி. விக்குள் என்பதுபோல
தொழிலாகு பெயராய்ச் சிவபெருமானை உணர்த்திற்று. அண்டம் ஆரிரு
ளூடு கடந்துஉம்பர் உண்டு போலும்ஓர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்கு
ஆர்அறி வர்அறிவார் எலாம், வெண்டிங்கட்கண்ணி வேதிய னென்பரே
(தி.5ப.97 பா.2) என்னுந் திருக்குறுந் தொகையாலறிக. இடம் மேவிய
மங்கையான் - இடப்பாகத்தில்
|