3327. |
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல் |
|
தலங்கொள்
கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. 8 |
3328. |
போதன் போதன கண்ணனு மண்ணல்தன் |
|
பாதந்
தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே. 9 |
அடியவர்கள் கேட்ட
வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திரு நாமமும்
திருவைந்தெழுத்தே ஆகும்.
கு-ரை:
வரதன் - கேட்ட வரம் அனைத்தும் தருவோன். உருத்திரர்...
புகுவித்தாரும் என்ற கருத்து உருத்திர பல்கணத்தாருடன் கலந்து புகச்
செய்யும். என்பர் - என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர்.
8.
பொ-ரை: இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப்
பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும்,
கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு
உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய
சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும்.
கு-ரை:
அடுக்கல் - மலை. மலங்கி - திகைத்து; மலங்கினேன்
கண்ணின் நீரைமாற்றி என்பது திருவாசகம். வாய்மொழி செய்தவன் -
வாயால் உச்சரித்தவன். உய்வகை - பிழைக்கும்படியான வகை. நலம்
கொள் - அத்தகைய நன்மையைத் தன்கட் கொண்டதான.
9.
பொ-ரை: தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர்
போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான
சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயற்சித்து காண
இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு
பெற்று ஓதி உய்ந்தது நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
போதன் - தாமரைப் பூவிலிருப்பவனாகிய பிரமனும். போது
அன கண்ணனும்- (தாமரைப்) பூப்போன்ற கண்களையுடைய
|