பக்கம் எண் :

726திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3337. கலவு சீவரத் தார்கையி லுண்பவர்
  குலவ மாட்டாக் குழக னுறைவிடம்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.       10

3338. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
  தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் றமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.      11

திருச்சிற்றம்பலம்


முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய
திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத்
தரிசித்து வழிபடுங்கள்.

     கு-ரை: கருவரு உந்தியினான் - சிருட்டி எல்லாம் தன்னிடத்தினின்று
உண்டாக்கத்தக்க உந்தியினான், உந்தியில் நான்முகன் தோன்றினான். செரு
- போரில். வருந்திய - பகைவரை வருந்துவித்த. கோச்செங்கட்சோழ
நாயனார்நாட்டிய தண்டலை நீணெறிநாயனார் ஆகையினால் நிருபன்
என்னாது நிருபர் என்றார்.

     10. பொ-ரை: சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும்,
கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் அன்பு
செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்தமாமதில் களும், சுண்ணச்
சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற திருத் தண்டலை நீள்நெறி
ஆகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

     கு-ரை: கலவு - சுற்றிய, சீவரத்தார் - சீவரமென்னும்
ஆடையையுடையவர்; புத்தர். இவர்கள் கொண்டாடுதற் கெட்டாத. குழகன்
- அழகன். சுலவும் - வளைந்த. நிலவு - விளங்குகின்ற.

     11. பொ-ரை: திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும்
திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின்
மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும்