பக்கம் எண் :

774திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3402. ஞால மளித்தவனும் மரி யும்மடி
       யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி
     னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ
     டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர
     மேத்துமினே.                       9

3403. துவருறு மாடையினார் தொக்க பீலியர்
       நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின்
     னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல்
     லாம்படைத்த
இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர
     மேத்துமினே.                       10


அருள்செய்து, உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: அடர்த்து - மோதி, குமை (அது) செய்து - குழைத்தல்
செய்து, குழைத்து, அது - பகுதிப்பொருள் விகுதி. பாட - பாடினதினால்,
உன்னுமின் - நினையுங்கள்.

     9. பொ-ரை: இப்பூவுலகைப் படைத்த பிரமனும், திருமாலும்,பலகாலம்
இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து காண முடியாது கதறி ஓலமிட
அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ பெருமான் உமாதேவியை உடனாகக்
கொண்டு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப்
போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: ஞாலம் - பூமி, அளித்தவன் - படைத்தவன், ஏல -
பொருத்தமாக, ஏத்து மின் - துதியுங்கள்.

     10. பொ-ரை: மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த புத்தர்களும்,
தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தி