பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)56. திருப்பிரமபுரம்775

3404. உரைதரு நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண்
       மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலி கின்ற
     பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன்
     பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள
     விரும்புவரே.                     11

திருச்சிற்றம்பலம்


யவராய், ஆடையில்லாத இடையையுடைய சமணர்களும், இறையுண்மையை
அறியாதவர்களாதலால் அவர்களை அணுகாதீர். திருவருள் பெற விரும்பும்
அடியார்களே! ஐயம் பல நிறைந்த மனத்தை ஒருமுகப்படுத்தி, சென்ற காலம்
முதலிய எல்லாக் காலத்தையும் படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான்
என்று வணங்கி, அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும்
திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: தொக்க - தொகுத்துக்கட்டிய, நக்கரையர் - நக்க - அரையர்
என்பதன் மரூஉ. நக்கம் - நக்நம் ஆடையின்மை, அரையர் -
இடுப்பையுடையவர், அணுகேன்மின் அருள் பெறுவீர் - அருள்பெற
விரும்புவீர் அணுகாதீர்கள். கழிகாலம் - சென்ற காலம் முதலிய, எலாம் -
எல்லாத் தத்துவங்களையும் படைத்த, இவரவர் என்பதனை அவர் இவர்
என மாற்றி - அந்தப்பரம்பொருள் பிரமாபுரத்தில் எழுந்தருளிய
இறைவனென்று பொருள் கொள்க.

     11. பொ-ரை: சிவபெருமானது பெருமையை உரைக்கும் நான்கு
வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து போற்ற,
அழகிய உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக விளங்கும்
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில் அருளாட்சியைப் போற்றி
ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம்
கமழும் விண்ணுலகத்துத் தேவர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்ல
விரும்புவர்.

     கு-ரை: பத்தும் - பத்துப்பாசுரங்களும். (ஆகுபெயர்) விரை தரு -
கற்பகப்பூமணம் வீசுகின்ற, (விண்ணுலகம்) விரும்புவர் - விரும்பியடைவர்.