பக்கம் எண் :

778திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி      னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட
     மொற்றியூரே.                      3

3408. அரவமே கச்சதாக வரைத் தானலர்
       கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை
     மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர்
     புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       4


காரணனாவான். மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள்
பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும்
வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: விளிதருநீர் - பிரளயகாலத்து உலகை அழிக்க வல்ல
தண்ணீர். அளிதரு - (உயிர்களைக்) காக்கின்ற. பேர் அருளான் -
பெருங்கருணையுடையவன், அரன் ஆகிய - சங்காரகர்த்தாவும் ஆகிய
ஆதிமூர்த்தி. எவன் சங்கார கர்த்தாவோ அவனே முழுமுதற்கடவுள்
என்னும் உண்மை நூற்கருத்துப்பற்றி இங்ஙனம் கூறினார்.

     4. பொ-ரை: சிவபெருமான் இடையிலே பாம்மைப் கச்சாக
அணிந்தவர். கொன்றை மலர்மாலை அணிந்தவர். வெண்ணிற முப்புரி
நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர்.
எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப்
போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர். அவர்
வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: அசைத்தான் - கட்டியவன். விரையார்வரைமார்பன்
- கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பையுடையவன். பரவுவார்
பாவம் எல்லாம். பறைத்து - ஓட்டி. ‘பரவுவார் பாவம் பறைக்கும் அடி’